திமுக தலைவர் கருணாநிதியை நலம் விசாரித்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் - Agnipuratchi

திமுக தலைவர் கருணாநிதியை நலம் விசாரித்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

Share This

காவேரி மருத்துவமனையில் கருணாநிதியின் உடல்நிலை குறித்து மு.க.ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோரிடம் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நலம் விசாரித்தார். ஜனாதிபதியின் வருகையினையொட்டி, சென்னை விமான நிலையத்தில் இருந்து காவேரி ஆஸ்பத்திரி வரையிலும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதன்பின், காவேரி மருத்துவமனைக்கு வந்த அவருடன் ஆளுநர் பன்வாரிலால் மற்றும் அமைச்சர் ஜெயக்குமார் இருந்தனர். மருத்துவமனையில் கருணாநிதியின் உடல்நிலை குறித்து மு.க.ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோரிடம் ராம்நாத் கோவிந்த் நலம் விசாரித்து விட்டு அங்கிருந்து ராம்நாத் கோவிந்த் கிளம்பினார். இதற்கிடையே அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் திரு கருணாநிதி அவர்களைச் சென்னையில் சந்தித்தேன். அவர்களின் குடும்பத்தார் மற்றும் மருத்துவரிடம் அவருடைய உடல்நலம் குறித்து கேட்டறிந்தேன். தமிழ்நாடு முன்னாள் முதல்வரும் முதுபெரும் தலைவருமான கலைஞர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என்று தமிழில் பதிவு செய்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages