முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாக குறைப்பது குறித்து ஆலோசிக்குமாறு, மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரளாவில் பெய்துவரும் கனமழையினால் அங்குள்ள அணைகள் முழுவதுமாக நிரம்பி, நீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்து, மக்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகியிருக்கின்றனர்.
இந்த நிலையில், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக குமுளி அருகே அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியுள்ளது.
இந்நிலையில், முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்க கோரி இடுக்கியை சேர்ந்த ரசூல்ராய் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்தார். மேலும் இதனை அவசர மனுவாக விசாரிக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இன்று விசாரணைக்கு இந்த வழக்கில், நீதிபதிகள், முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாக குறைப்பது குறித்து, அணையின் துணை கண்காணிப்பு குழு மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை குழு கலந்தாலோசித்து முடிவெடுக்குமாறு உத்தரவிட்டனர்.
கேரளாவில் உள்ள எவருக்கேனும் உதவி தேவைப்பட்டால் தூத்தா'வின் க்ரூப்பில் உள்ள ஹேஷ்டேக்களுக்கு உங்களது விவரங்களை அனுப்புங்கள் - dutaKeralaFloods or dutaKeralaRains
நாங்கள் உங்கள் விவரங்களை அரசாங்கத்திற்கு தெரிவிப்போம்
No comments:
Post a Comment