மனைவிகளிடமிருந்து காப்பாற்ற ஆண்களுக்கும் தனி ஆணையம் தேவை: பாஜக எம்.பி. கோரிக்கை. - Agnipuratchi

மனைவிகளிடமிருந்து காப்பாற்ற ஆண்களுக்கும் தனி ஆணையம் தேவை: பாஜக எம்.பி. கோரிக்கை.

Share This

உத்தரப் பிரதேச மாநிலம், கோஸி மக்களவைத் தொகுதியிலிருந்து பாஜக சார்பில் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஹரிநாராயண் ராஜ்பர்.

மக்களவையில் நேற்று நடைபெற்ற விவாதத்தின்போது ஹரிநாராயண் தெரிவித்த கருத்து சிரிப்பலையை ஏற்படுத்தியது.

மகளிர் ஆணையம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை மத்திய அரசு அமைத்துள்ளது. எனினும், ஆண்கள் சந்திக்கும் பிரச்னைகளை தீர்க்க எந்த அமைப்பும் இல்லை.

நாட்டில் பெரும்பாலான கணவன்மார்கள் தங்களது மனைவிகள் கொடுக்கும் தொல்லையால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர், வீட்டு  சிறையில் அடைப்பட்டது போன்று உணர்கின்றனர். பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளை தீர்க்க மகளிர் ஆணையம் அமைத்ததுபோல், ஆண்களின் பிரச்னைகளை தீர்க்க அவர்களுக்கும் தனி ஆணையம் அமைக்க வேண்டும் என்றார் ஹரிநாராயண்.

அப்போது, அவையில் 5 பெண் எம்.பி.க்கள் இருந்தனர். அவர்கள் உள்பட அவையிலிருந்த அனைத்து எம்.பி.களும்  பலமாக சிரித்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages