பிரியாணி கடையில் பிரியாணி தீர்ந்து விட்டது என்றதற்காக கடை ஊழியர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்திய திமுகவின் யுவராஜ் உள்ளிட்ட 2 பேரை அக்கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
திமுக மாணவர் அணி நிர்வாகி யுவராஜ், திவாகர் ஆகியோர் கடந்த 28-ஆம் தேதி சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஒரு பிரியாணி:chicken_leg: கடைக்கு தங்களது குண்டர்களுடன் சென்றிருந்தனர். அப்போது கடை மூடியிருந்தால் இவர்கள் கடையை திறக்குமாறு சொல்லியுள்ளனர். இதனால் ஊழியர்கள் கடையை திறந்தவுடன் பிரியாணி கேட்டனர். அதற்கு ஊழியர்கள் தீர்ந்துவிட்டது என்பதால்தான் கடையை மூடியுள்ளோம் என்று கூறியுள்ளனர்.
அதற்கு இந்த குண்டர்கள் நாங்கள் திமுகவை சேர்ந்தவர்கள், எங்களுக்கே பிரியாணி இல்லை என்கிறீர்களா என்று கேட்டு அங்கிருந்த கேஷியர் முகத்தில் சரமாரியாக குத்தினர். இதை தடுக்க முயன்ற கடை ஊழியர்களையும் தாக்கினர்.
இது தொடர்பாக திமுக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில் எதிர்பார்த்தபடியே குண்டர்கள் யுவராஜ், திவாகர் ஆகியோரை கட்சியிலிருந்து நீக்குவதாக தலைமை கழகம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment