கல்லூரி வளாகத்திற்குள் மாணவ, மாணவிகள் செல்போனில் அரட்டையில் மூழ்குவதால் அவர்களின் கல்வி நலன் பாதிக்கப்படுவதாகவும், தவறான செயல்களில் ஈடுபடுவதாகவும் உயர்கல்வித்துறை செயலருக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன.
இதையடுத்து, அனைத்து அரசு /உதவிபெறும் /சுயநிதி /பல்கலைகளின் கீழ் இயங்கும் கல்லூரிகளின் வளாகத்திற்குள் மாணவ, மாணவிகள் செல்போன் பயன்படுத்தக் கூடாது என தமிழ்நாடு கல்லூரிக்கல்வி இயக்குநர் சாருமதி உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் கல்லூரிக்கல்வி இயக்குநரகம் கட்டுப்பாட்டின் கீழ் மொத்தம் 1543 கல்லூரிகள் இயங்கி வருகின்றன.
No comments:
Post a Comment