முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் இரங்கல் - Agnipuratchi

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் இரங்கல்

Share This

இந்தியாவின் முன்னாள் பிரதமரும், மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவருமான வாஜ்பாய் அவர்கள் உடல்நலக் குறைவால் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

இந்தியாவின் மூத்த அரசியல் தலைவரான வாஜ்பாய்க்கு ஏராளமான சிறப்புகள் உண்டு. இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பிரச்சினைக்கு தீர்வு காண உண்மையாகவே அக்கறை கட்டினார். இரு நாடுகளுக்கிடையே அமைதிப் பேருந்துகளை இயக்கி சமாதானம் ஏற்படுத்த வாஜ்பாய் மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டத்தக்கவை. உள்நாட்டு அரசியலைப் பொறுத்தவரை அனைவரின் கருத்துகளையும் அறிந்து கருத்தொற்றுமை அடிப்படையில் அனைத்துத் திட்டங்களையும் செயல்படுத்த முயன்றவர்.

1977-ஆம் ஆண்டு மொரார்ஜி தேசாய் தலைமையிலான அரசில் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்து பெற்ற அனுபவத்தின் பயனாக 1998-ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சியமைத்த பிறகு வெளியுறவுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்தவர். 2000-ஆவது ஆண்டில் அமெரிக்கப் பிரதமராக பதவியேற்ற கிளிண்டன் தமது முதல் சுற்றுப்பயணமாக இந்தியாவுக்கு வந்தது அவரது வெளியுறவுக் கொள்கைக்கு கிடைத்த வெற்றியாகும். வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் அனைத்து நாடுகளுடனும் நல்லுறவு அதிகரித்தது.

இந்தியாவில் தங்க நாற்கரச் சாலைத் திட்டத்தை அறிமுகப்படுத்தி அதன் மூலம் சாலை வசதியை  வாஜ்பாய் மேம்படுத்தினார். வாஜ்பாய் அவர்களின் மறைவு இந்தியாவுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


1 comment:

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages