அண்ணா பல்கலைக்கழக பதிவாளரை நீக்க தமிழக ஆளுநருக்கு கோரிக்கை - Agnipuratchi

அண்ணா பல்கலைக்கழக பதிவாளரை நீக்க தமிழக ஆளுநருக்கு கோரிக்கை

Share This

அண்ணா பல்கலைக்கழக தேர்வு விடைத்தாள் மறுமதிப்பீட்டில் பணம் பெற்று கொண்டு அதிக மதிப்பெண் அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பல்கலைக்கழகத்தின் முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டாளர் உமா உள்ளிட்ட பத்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உமா உட்பட 3 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்ற அனைத்து ஊழல்களுக்கும் பல்கலைக்கழக பதிவாளர் கணேசன் தான் காரணம் என்று குற்றம் சாட்டினர். கணேசனை பதிவாளர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு புதிய பதிவாளரை நியமிக்க அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தருக்கு அறிவுறுத்துமாறு தமிழக ஆளுநருக்கு ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages