சென்னை புத்தகத் திருவிழா இன்று தொடக்கம் - Agnipuratchi

சென்னை புத்தகத் திருவிழா இன்று தொடக்கம்

Share This

சென்னை புத்தகத் திருவிழா' ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் சனிக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கவுள்ளது.

இந்த நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை தொடங்குவதாக இருந்த நிலையில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு காரணமாக சனிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

புத்தகக் காட்சி நடைபெறும் வளாகத்தில் வாஜ்பாய் படத்துக்கு புத்தககாட்சி ஒருங்கிணைப்பாளர்கள் வெள்ளிக்கிழமை மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

தமிழ் நூல் வெளியீடு மற்றும் விற்பனை மேம்பாட்டுக் குழுமத்தின் சார்பில் நடைபெறவுள்ள இந்தப் புத்தகத் திருவிழாவில் 200-க்கும் அதிகமான அரங்குகளில் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம் என 4 மொழிகளில் ஒரு கோடி புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட உள்ளன.

இதில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் கலந்து கொண்டு கண்காட்சியைத் தொடங்கி வைக்கவுள்ளார்.
இதைத் தொடர்ந்து வரும் 27-ஆம் தேதி வரை 10 நாள்கள் புத்தகத் திருவிழா நடைபெறவுள்ளளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages