கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக, அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் முழுமையாக நிரம்பின. இதையடுத்து, அந்த அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2 லட்சம் கனஅடிக்கும் மேல் அதிகரித்தது. இடைப்பட்ட காலத்தில் மழையின் அளவு குறைந்ததால் நீர்வ்ரத்தும் குறைந்திருந்தது. இந்நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் பெய்த மழையால், ஒகேனக்கல் காவிரி மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது. நேற்று அணைக்கு விநாடிக்கு 20,742 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 26 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் 120.01 அடியாகவும், நீர் இருப்பு 93.48 டிஎம்சியாகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
காவேரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை- அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment