வீராணம் ஏரி நீர்திறப்பு அதிகரிப்பு - Agnipuratchi

வீராணம் ஏரி நீர்திறப்பு அதிகரிப்பு

Share This

வீராணம் ஏரியில் இருந்து, பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்கான நீர் திறப்பை, பொதுப்பணித் துறை அதிகரித்துள்ளது.மேட்டூர் அணையில் திறக்கப்பட்டுள்ள நீர், கொள்ளிடம் ஆற்றின் வழியாக, கடலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது

இந்த நீர், வடவாறு வழியாக, சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரிக்கு வந்துகொண்டு இருக்கிறது.மொத்தம், 1.45 டி.எம்.சி., கொள்ளளவு கொண்ட ஏரியில், தற்போது, 1 டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளது.கொள்ளிடத்தில் திறக்கப்பட்டுள்ள நீர், விரைவில் வீராணம் ஏரியை அடையும்.

இதனால், ஏரியில் இருந்து, நீர் திறப்பு, வினாடிக்கு, 1,046 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.வினாடிக்கு, 74 கன அடி நீர், சென்னையின் குடிநீர் தேவைக்காக, ராட்சத குழாய்கள் வாயிலாக, 'பம்பிங்' செய்து, அனுப்பி வைக்கப்படுகிறது

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages