பெங்களூரு விமான நிலையத்தில் திருமுருகன் காந்தி கைது - Agnipuratchi

பெங்களூரு விமான நிலையத்தில் திருமுருகன் காந்தி கைது

Share This

ஜெர்மனியிலிருந்து பெங்களூரு வந்து இறங்கிய 'மே பதினேழு' இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டுள்ளார். ஐ.நாவில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு மற்றும் 8 வழிச்சாலை விவகாரங்கள் குறித்து பேசியதால் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும் விடுதலை புலிகள் மீதான தடையை நீக்க கோரி திருமுருகன் காந்தி உரையாற்றியதால் அவர் மீது தேச துரோக வழக்கு நிலுவையில் உள்ளதால், அவர் எந்த விமான நிலையம் வந்தாலும் கைது செய்யும் படி லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது என்றும், அதனால் தான் கைது⛓ செய்ததாவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, "பழைய போராட்ட வழக்குகளை காரணம் காட்டி திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மத்திய, மாநில அரசுகளின் இந்த அடக்கு முறையினை வன்மையாக கண்டிக்கிறோம் என்று 'மே பதினெழு' இயக்கம் சார்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages