தமிழகத்தில் பேட்டரியில் இயங்கக்கூடிய பஸ்கள் இயக்குவது தொடர்பான ஆய்வுக்காக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் லண்டன் சென்று, சில நாட்களுக்கு முன்னர் கரூர் திரும்பினார். இந்நிலையில் இன்று காலை கரூரில் உள்ள குமரன் உயர்நிலை பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் கூறுகையில் தமிழகத்தில் பேட்டரி பஸ்களை இயக்க அரசு முடிவு செய்துள்ளது. சென்னை வழித்தடத்தில் சி 40 என்ற அமைப்பு வழித்தடங்களை ஆய்வு செய்து வருகிறது. ஆய்வுக்கு பிறகு முதல்கட்டமாக சென்னையில் 80, கோவையில் 20 பேட்டரி பஸ்கள் இயக்கப்படும். ஒரு பேட்டரி பஸ்சின் விலை ரூ.2 கோடி. இதுதவிர புதிதாக 500 பஸ்கள் இயக்கப்பட உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 100 பேட்டரி பேருந்துகள் இயக்க முடிவு-அமைச்சர் விஜயபாஸ்கர்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment