ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 27 வருடங்களாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரை சிறையிலிருந்து விடுவிக்க தமிழக அரசு முடிவு! இதற்கான தீர்மானம் - ஆளுநருக்கு பரிந்துரை செய்தது முதல்வர் தலைமையிலான தமிழக அமைச்சரவை! இன்றே பரிந்துரை கடிதம் அனுப்பப்படும். அமைச்சரவை பரிந்துரை செய்தால் ஆளுநர் ஏற்க சட்டம் வலியுறுத்துகிறது. ஆளுநர் தாமதப்படுத்தவோ, மத்திய அரசிடம் ஆலோசனை என்ற பெயரில் தள்ளிப் போட வழியில்லை. அமைச்சரவை பரிந்துரையை ஆளுநர் ஒப்புக் கொண்டு ஆகவேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் உறுதி!
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேருக்கும் உடனே விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன் தமிழக அரசு பார்த்துக்கொள்ளும்.
பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் நம்பிக்கை
தமிழக அரசின் முடிவுக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு
7 பேரை விடுதலை செய்வது, எதிர் காலத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும்.....
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்
No comments:
Post a Comment