சென்னையில் போலீஸ் சூப்பிரண்டு அந்தஸ்தில் உள்ள பெண் அதிகாரி ஒருவர் தனது மேல் அதிகாரியான போலீஸ் ஐ.ஜி. மீது பாலியல் புகார் அளித்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மாநில குற்ற ஆவணக் காப்பக கூடுதல் டிஜிபி சீமா அகர்வால் தலைமையிலான 5 நபர் கொண்ட விசாகா கமிட்டி அமைக்கப்பட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது⚖. ஆனால் இக்குழுவில் ஓய்வு பெற்ற காவல் அதிகாரி சரஸ்வதி நியமிக்கப்பட்டதை தொடர்ந்து சர்ச்சை எழுந்தது. இந்தக் குழுவில் வெளிநபர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்ற உச்சநீதிமன்ற வழிகாட்டல் மீறப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் அந்த அதிகாரியை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும், இக்குழுவை மாற்றியமைக்க வேண்டுமென்றும் அந்த பெண் கோரிக்கை வைத்தார்.
இதனையடுத்து, தங்களுக்கு இதற்கான அதிகாரம் இல்லை என்பதால் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற தமிழக அரசுக்கு விசாகா கமிட்டி பரிந்துரை செய்துள்ளது. மேலும் ஐஜி மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறும் பணியிட மாற்றம் செய்யுமாறும் அரசுக்கு விசாகா கமிட்டி பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஜி. மீதான பாலியல் புகார்-சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற பரிந்துரை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment