திமுக'வினர் மீது வழக்கு பதிவு-முதல்வரை அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு - Agnipuratchi

திமுக'வினர் மீது வழக்கு பதிவு-முதல்வரை அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு

Share This

அ.தி.மு.க. அரசை கண்டித்து தி.மு.க. சாா்பில் கண்டன பொதுக் கூட்டம் கடந்த 26ம் தேதி கோவை மாவட்டம் போரூர் பகுதியில் நடந்தது. இதில் அக்கட்சியின் அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இந்த கூட்டத்தில் முதல்வா் பழனிசாமி மற்றும் அ.தி.மு.க. அமைச்சா்கள் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இது தொடா்பாக அ.தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளா் ஜெகநாதன் புகாா் அளித்ததையடுத்து, அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி, சட்டமன்ற உறுப்பினா் காா்த்திக், மாவட்டச் செயலாளா் ராமச்சந்திரன் உள்பட 7 போ் மீது 5 பிரிவுகளின் கீழ் காவல் துறையினா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages