எச்.ராஜா நேரில் ஆஜராக வேண்டும்-சென்னை உயர்நீதிமன்றம் - Agnipuratchi

எச்.ராஜா நேரில் ஆஜராக வேண்டும்-சென்னை உயர்நீதிமன்றம்

Share This

நீதிமன்றத்தை அவதூறாக பேசிய வழக்கில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மீது சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்ததோடு, இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சி.டி.செல்வம், நிர்மல்குமார் அமர்வு 4 வாரத்திற்குள் அவர் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. காவல்துறை குறித்து அவதூறாக பேசியது, சட்டவிரோதமாக கூடுதல், அமைதிக்கான ஆணையை மீறுதல் உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் ஹெச்.ராஜா மீது திருமயம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றுள் சில பிரிவுகள் ஜாமீனில் வெளிவர முடியாதது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஹெச்.ராஜாவை கைது செய்ய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 10 பேர் கொண்ட 2 தனிப்படையினர் ஹெச்.ராஜாவை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். எச்.ராஜா அவதூறாக பேசிய வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ பதிவு

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages