ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் சிலை திருட்டு-அதிகாரிகள்ஆய்வு - Agnipuratchi

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் சிலை திருட்டு-அதிகாரிகள்ஆய்வு

Share This

பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படும் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயிலில் இந்தியா மட்டுமல்லாது உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் பக்தர்கள் கோவிலுக்கு வருவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில், கோயிலின் மூலவாசல் சேதம் அடைந்துள்ளதாகவும், சில சிலைகள் காணாமல் போனதாகவும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரெங்கராஜ் என்பவர் வழக்கு பதிவு செய்திருந்தார். இதன் அடிப்படையில், உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின் பெயரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு எ.டி.எஸ்.பி ராஜாராம் மற்றும் 20 பேர் கொண்ட குழு அரங்கநாதர் திருக்கோயிலில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து இக்கோயிலின் சக்கரத்தாழ்வார் சன்னதி, ஆயிரங்கால் மண்டபம், கோயிலின் கருவறை ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கோயிலின் இணை ஆணையர், குருக்கள் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages