ஸ்ரீரங்கம் கோவிலில் தொல்லியல் ஆய்வுக்கு அனுப்பிய நகைகள் மாயம் - Agnipuratchi

ஸ்ரீரங்கம் கோவிலில் தொல்லியல் ஆய்வுக்கு அனுப்பிய நகைகள் மாயம்

Share This

ஸ்ரீரங்கம் கோயில் பாதாள அறையில் இருந்த விலை மதிப்பு மிக்க நகைகள் மற்றும் பொக்கிஷங்கள் மாயமாகி இருப்பதாக கூறியிருக்கும் பக்தர்கள், கேரள ஜோதிடர்களை கொண்டு இரவில் பிரசன்னம் பார்த்து கோயில் மதில்கள் உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டதையடுத்து புகார் அளிக்கப்பட்டது. கடந்த 2015ம் ஆண்டு தொல்லியல்துறையினரின் ஒப்புதலை பெற்று, அதிகாரிகள் கலந்து ஆலோசித்த பின் தான் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது என கோயில் அதிகாரிகள் தெரிவித்திருந்தார்கள். ஆனால் தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டபோது, தொல்லியல் துறையினர் எந்த ஆலோசனையும் செய்யவில்லை, அதிகாரிகளையும் கோயிலுக்கு அனுப்பவில்லை என்று தெரியவந்தது. மேலும் ஒய்வு பெற்ற அதிகாரியை வைத்து மட்டுமே இந்த ஆய்வானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் மாந்திரீகமானது கோயிலுக்குள்ளே பார்க்கப்பட்டது போன்று புதுப்புது தகவல்கள் ஆர்.டி.ஐ. வெளியிட்டுள்ளது. ஆகவே விரிவான விசாரணை நடைபெற்றால் தான் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் என்ன நடத்தந்து என்பது தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages