பவானிசாகர் தொகுதி எம்.எல்.ஏ. ஈஸ்வரனுக்கு நிச்சயிக்கப்பட்ட மணப்பெண் மாயம் என்ன கொடுமை சார் இது! - Agnipuratchi

பவானிசாகர் தொகுதி எம்.எல்.ஏ. ஈஸ்வரனுக்கு நிச்சயிக்கப்பட்ட மணப்பெண் மாயம் என்ன கொடுமை சார் இது!

Share This

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதி எம்.எல்.ஏ. ஈஸ்வரனுக்கு நிச்சயிக்கப்பட்ட மணப்பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பவானிசாகர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வாக உள்ள ஈஸ்வரனுக்கு வயது 42. இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

இந்த நிலையில் ஈஸ்வரனுக்கும், சத்தியமங்கலம் அருகே மில்மேடு பகுதியைச் சேர்ந்த எம்.சி.ஏ. பட்டதாரி சந்தியா என்பவருக்கும் திருமணம் செய்ய பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டது.

அடுத்த வாரம் புதன் கிழமை பண்ணாரி அம்மன் கோவிலில் திருமணம் நடைபெறவிருந்த நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியே சென்ற சந்தியா வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்ணின் பெற்றோர், கடத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரைத் தொடர்ந்து மாயமான மணப்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages