சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் அனுமதி தீர்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் முழு அடைப்பு - Agnipuratchi

சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் அனுமதி தீர்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் முழு அடைப்பு

Share This

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் வழிபட அனுமதி அளித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரளாவில் அக்டோபர் 1ம் தேதி மாநிலம் தழுவிய முழு அடைப்புக்கு சிவசேனா கட்சி அழைப்பு விடுத்துள்ளது. கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோயிலுக்கு பருவம் அடையாத சிறுமிகளும், மாதவிலக்கு பருவத்தை தாண்டிய பெண்களும் மட்டுமே தரிசனம் செய்ய செல்ல முடியும். பல ஆண்டுகளாக இந்த மரபு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 2006ம் ஆண்டு இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ‘சபரிமலையில் அனைத்து பெண்களையும் அனுமதிக்க உத்தரவிட வேண்டும்’ என கோரப்பட்டது. இதனையடுத்து அனைத்து வயது பெண்களுக்கும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages