தேர்தலில் போட்டியிட தடை விதிக்க முடியாது- உச்சநீதிமன்றம் - Agnipuratchi

தேர்தலில் போட்டியிட தடை விதிக்க முடியாது- உச்சநீதிமன்றம்

Share This

பப்ளிக் இண்ட்ரஸ்ட் பவுண்டேஷன் என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு, பாஜக நிர்வாகி அஸ்வினி குமார் உபாத்யாய உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுக்களை தாக்கல் செய்தனர். அதில், குற்ற வழக்குகளில் குற்றச்சாட்டுப் பதிவுக்கு ஆளாகும் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும். அவர்களை தேர்தலில் போட்டியிடவும் தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து உச்சநீதிமன்றத்தில் கடந்த 28ந் தேதி விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதனையடுத்து அதன் இறுதி தீர்ப்பு இன்று அளிக்கப்பட்டது. அதன் தீர்ப்பின் படி, குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தாலே தேர்தலில் போட்டியிட தடை விதிக்க முடியாது" என்று உத்தரவிடப்பட்டது. மேலும், அரசியலில் ஊழலும், முறைகேடுகளும் கொஞ்சம், கொஞ்சமாக வளர்ந்து வருவது வேதனை அளிக்கிறது. அரசியல் கட்சிகள் தாங்களாகவே அடிப்படை நாகரிகத்தைக் கடைபிடிக்க வேண்டும். தேர்தலில் போட்டியிட தடை விதிக்கும் இடத்தில் நாங்கள் இல்லை என்று தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages