நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் சார்பில் கடந்த 16ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசினார். அப்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னை கண்டு அஞ்சுவதாக தெரிவித்தார். மேலும் போலீசையும் அவர் அவதூறாக பேசியதையடுத்து அவர் மீது எதிர்ப்புகள் கிளம்ப, 8 பிரிவுகளின் கீழ் வழக்குகளும் பதியப்பட்டது. இந்நிலையில், கருணாசை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து போலீசார் நேற்று அதிகாலை அதிரடியாக கைது⛓ செய்துள்ளார்கள். கைதாகி வேனில் ஏற்றும் முன்பு ஊடகங்களிடம் பேசிய கருணாஸ், ‘சட்டமன்ற உறுப்பினரான என்னை கைது⛓ செய்ய சபாநாயகரின் அனுமதி வேண்டும். ஆனால் அனுமதி வாங்கினார்களா என்பது தெரியவில்லை' என்றும், 'கருத்து சுதந்திரத்தை நசுக்கும் நோக்கில் ஆளும் அதிமுக அரசு செயல்படுகிறது. இந்த வழக்கை சட்டப்பூர்வமாக நீதிமன்றத்தில் சந்திப்பேன்' என்றும் தெரிவித்தார்.
கருணாஸ் தனது வீட்டிலேயே கைது செய்யப்பட்டார்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment