உள்ளாட்சித்துறை முறைகேடு -பதவி விலக தயார் என்கிறார் எஸ்.பி.வேலுமணி - Agnipuratchi

உள்ளாட்சித்துறை முறைகேடு -பதவி விலக தயார் என்கிறார் எஸ்.பி.வேலுமணி

Share This

உள்ளாட்சித்துறையில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என்றும், புகார் குறித்து ஆதாரங்களை தந்தால் இன்றைக்கே பதவி விலக தயார் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் உள்ளாட்சித் துறையில் முறைகேடு தொடர்பாக ஆதாரங்களுடன் விவாதிக்க தயார் என திமுகவின் ஆர்.எஸ்.பாரதி கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், 'திமுகவில் ப்யூன் வேலை பார்த்த ஆர்.எஸ்.பாரதிக்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது' என்று கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் மின்வெட்டு குறித்து பேசுவதற்கு டிடிவி தினகரனுக்கு அருகதையில்லை எனவும், மின்துறை அமைச்சர் தங்கமணி சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages