திருவண்ணாமலை அடுத்த கனந்தம்பூண்டியில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் முதல்வராக இருந்த சீனிவாசன் என்பவர் திருச்சிக்கு கடந்த மாதம் மாற்றப்பட்டார். அவரது இடத்துக்கு பீகாரைச் சேர்ந்த குமார் தாகூர் என்பவர் நியமிக்கப்பட்டார். இவர் பெங்களூரில் பணியில் இருந்த போது மாணவிகளை மிகவும் ஆபாசமாக பேசியது மற்றும் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக இவர் மீது போக்சோ உள்ளிட்ட பல பிரிவுகளில் பெங்களூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான குமார் தாகூர் திருவண்ணாமலை பள்ளி முதல்வராக மாற்றப்பட்டார் என்று சமூக வலை தளங்களில் தகவல் பரவியது. இதனை அறிந்த மாணவர்களின் பெற்றோர்கள், குற்றவழக்கில் தொடர்புடையவரை மாற்ற வேண்டும் என்று பள்ளி முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும் அவர்கள் இதுகுறித்து கேந்திரிய வித்யாலயா பள்ளி தலைவராக உள்ள கலெக்டர் கந்தசாமிக்கு வாட்ஸ் அப்பில் புகார் தெரிவித்தனர். இதையடுத்து முதல்வர் பொறுப்பில் இருந்து குமார் தாகூரை நீக்கி கலெக்டர் கந்தசாமி அதிரடியாக உத்தரவிட்டார். குமார் தாகூர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாலியல் புகார்-கேந்திரி வித்யாலயா பள்ளி முதல்வர் நீக்கம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment