ஸ்டெர்லைட் வழக்கை பசுமைத் தீர்ப்பாயம் விசாரிக்க தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயம் பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான பிரச்சினைகள் பற்றி ஆராய்ந்து அறிக்கை அளிக்க, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து பசுமை தீர்ப்பாய விசாரணைக்கு தடை கோரியும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் விசாரணைக்கும், பசுமைத் தீர்ப்பாயம் அமைத்த குழுவின் ஆய்வுக்கும் தடை விதிக்க முடியாது என மறுப்புத் தெரிவித்து விட்டது. இந்நிலையில், இந்த தீர்ப்பை⚖ மறுஆய்வு செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.
ஸ்டர்லைட் ஆலை ஆய்வு விவகாரம்-தடை கோரி தமிழக அரசு மனு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment