ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முடிவெடுக்க கவர்னருக்கு அதிகாரம் இல்லை-மத்திய உள்துறை அமைச்சகம் - Agnipuratchi

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முடிவெடுக்க கவர்னருக்கு அதிகாரம் இல்லை-மத்திய உள்துறை அமைச்சகம்

Share This

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேரை விடுதலை செய்ய தமிழக கவர்னருக்கு அதிகாரம் இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் அதிர்ச்சி தகவலை அளித்துள்ளார்கள். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை 9ந்தேதி கூடி, தீர்மானம் நிறைவேற்றி தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு தீர்மானத்தை அண்மையில் அனுப்பி வைத்தனர். இந்நிலையில், தற்போது மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, "ராஜீவ்காந்தி கொலையில் சர்வதேச தொடர்புகள் உள்ளன. எனவே இவர்களை விடுதலை செய்வது குறித்து முடிவு எடுப்பதற்கு முன்னதாக, மத்திய அரசிடம் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நிச்சயம் கலந்து ஆலோசிக்க வேண்டும். 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக கவர்னருக்கு அதிகாரம் இல்லை" என்று உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages