18 எம்எல்ஏக்களையும் குற்றாலத்தில் தங்கியிருக்க டிடிவி தினகரன் அறிவுறுத்தல் - Agnipuratchi

18 எம்எல்ஏக்களையும் குற்றாலத்தில் தங்கியிருக்க டிடிவி தினகரன் அறிவுறுத்தல்

Share This

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு வரும் வரை குற்றாலத்தில் தங்கியிருக்க ஆதரவாளர்களுக்கு தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த ஜூன் 14 ஆம் தேதி 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் ஆகியோர் வேறுபட்ட தீர்ப்புகளை வழங்கினர். இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணை வேறு அமர்விற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு நாளை மறுநாள் விசாரணைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தகுதிநீக்க எம்எல்ஏக்கள் 18 பேரையும் குற்றாலத்தில் தங்கியிருக்க அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்னும் ஓரிரு நாளில் தீர்ப்பு வர வாய்ப்பு உள்ள நிலையில் 18 பேரையும் அ.தி.மு.க. கடத்தக் கூடும் என்று டி.டி.வி. தினகரன் சந்தேகம் அடைந்தததையடுத்து இவ்வாறு அறிவுரை வழங்கி உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages