சேலத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்த 6 சாய ஆலைகள் இடித்து அகற்றப்பட்டன. சேலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் கால்வாய்கள், திருமணிமுத்தாற்றில் அதிகப்படியான தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொண்ட சாய ஆலைகள் அதிகப்படியான கழிவுகளை இரவோடு இரவாக ஆற்றில் கலந்து விட்டுள்ளார்கள். இதனால் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே திருமணிமுத்தாற்றில் மலை போல் நுரை பொங்கியது. இதுகுறித்து புகார் எழுந்தது. இதையடுத்து நேற்று மாலை முதல் ஆய்வு மேற்கொண்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சட்டவிரோதமாக இயங்கி வரும் ஆலைகளை கண்டறிந்து, அதில் 6 ஆலைகளை இடித்து அகற்றியுள்ளார்கள். இதனையடுத்து, இது போன்ற ஆலைகளின் கழிவுகள் நீர்நிலைகளில் கலக்கப்படுவதால் விவசாயம் செய்ய முடியவில்லை என்று விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளார்கள். மேலும், தொடர்ந்து அதிகாரிகள் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமணிமுத்தாறு நுரை விவகாரம்-சேலத்தில் 6 சாய ஆலைகள் இடிக்கப்பட்டது
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment