குதூகலத்துடன் கோயம்பேடு
கோயம்பேடு வணிக வளாகத்தில் பூ, பழங்கள் மற்றும் வழிபாட்டுப் பொருட்களுக்கான விற்பனை அமோகமாக நடைபெற்றது. பழங்கள் வரத்து அதிகரிப்பின் காரணமாக விலை உயர்வு இல்லை. பூக்கள் விலை சற்று உயர்ந்துள்ளது. சம்மங்கி கிலோ 300 ரூபாய்க்கும், சாமந்தி 100 முதல் 160 ரூபாய்க்கும் விற்கப்படுகறிது.
மல்லி கிலோ 500 ருபாய்க்கும், முல்லைப்பூ கிலோ 360 ரூபாய்க்கும் விறக்கப்படுகிறது.
பழங்களைப் பொருத்தவரை ஆப்பிள் 80 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை ரகத்துக்கு ஏற்ப விற்கப்படுகிறது. சாத்துக்குடி 25 முதல் 40 ரூபாய்க்கும், மாதுளை 70 முதல் 180 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.*
கரும்புக்கட்டு 100 ரூபாய்க்கும், வாழைக்கன்று கட்டு 30 முதல் 60 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இதேபோல், பொரி மூட்டை ஒன்று 450 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கடலை, அவல், வெள்ளம் உள்ளிட்டவை தலா படி ஒன்று 120 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
மாஸ் காட்டிய மதுரை
மதுரையில் சிம்மக்கல், மேலமாசி வீதி-வடக்குமாசி வீதி சந்திப்பு, யானைக்கல், கீழமாசி வீதி, விளக்குத்தூண், பெரியார் பேருந்து நிலையம், காளவாசல் மற்றும் நகரின் அனைத்துப் பகுதிகளிலும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. வாழை மரம், இலை, தேங்காய், பொரிகடலை, அவல், பழங்களை மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.
கொண்டாட்டத்தில் கோவை
கோவையிலும், ஆயுதபூஜையை முன்னிட்டு பொருட்களின் விற்பனை களைகட்டியுள்ளது. ஆயுத பூஜைக்கு முந்தைய தினத்தை விட, வியாழன் அன்று விற்பனை அதிகமாக இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
திமிறியடித்த திருச்சி
திருச்சி காந்தி மார்க்கெட்டில் பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்க பொதுமக்கள் குவிந்தனர். வாழைக்கன்று, தோரணம், பழ வகைகள், பொரி ஆகியவற்றை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். கடந்த ஆண்டை விட இந்தாண்டு பொருட்களின் விலை குறைந்து காணப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கலக்கல் கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பூ சந்தையில் விலை அதிகமாக இருந்தாலும், பொதுமக்களின் ஆர்வம் குறையவில்லை. புதன் அன்று கிலோ 400 ரூபாய்க்கு விற்கப்பட்ட மல்லிகை பூ இன்று 1400 ரூபாய்க்கும், 600 ரூபாய்க்கு விற்பனையான பிச்சி பூ 1500 ரூபாய்க்கும் விற்பனையானது. இதேபோல் வாடாமல்லி, சம்பங்கி உள்ளிட்ட பூக்களின் விலையும் பலமடங்கு உயர்ந்துள்ளது.
No comments:
Post a Comment