பெரும் சர்ச்சையில் சிக்கினார் அமைச்சர் ஜெயக்குமார்! ஜெயக்குமாருக்கு பிறந்த ரகசிய குழந்தை?- அதிர்ச்சி தகவல் - Agnipuratchi

பெரும் சர்ச்சையில் சிக்கினார் அமைச்சர் ஜெயக்குமார்! ஜெயக்குமாருக்கு பிறந்த ரகசிய குழந்தை?- அதிர்ச்சி தகவல்

Share This

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தன்னிடம் சிபாரிசு கேட்டு வந்த பெண்ணை கர்ப்பமாக்கியதாக  வெளியான ஆடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்பெண்ணுக்கு கடந்த ஆகஸ்டு மாதம் ஆண் குழந்தை பிறந்துள்ளதாக ஜெயக்குமார் பெயரை தாங்கிய பிறப்புச் சான்றிதழ் நகல் ஒன்றும் வைரலாகி வருவது மேலும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் ஒரு பெண்ணிடம் தொலைப்பேசியில் பேசிய ஆடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த ஆடியோவில், அப்பெண் சிபாரிசு கேட்டு வந்த தனது மகளை ஜெயக்குமார் கர்ப்பமாக்கி விட்டதாக கூறுகிறார். இதுகுறித்து ஜெயக்குமாரிடம் அப்பெண் கூறிய போது அந்த குழந்தையை கலைத்துவிடுமாறு  ஜெயக்குமார் கூறுகிறார்.

தொடர்ந்து அந்த பெண் தனது வீட்டில் இருக்கும் ஆண்களை அழைத்து வந்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று கூறுகிறார். அவர்களை எல்லாம் அழைத்துவர வேண்டாம், தனியாக வாருங்கள் பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்று அப்பெண் கூறுகிறார்.

வெளியான ஆடியோ: https://youtu.be/2YzrhyIcTtI

இந்நிலையில் அந்த குழந்தை கடந்த ஆகஸ்ட் மாதம் பிறந்ததற்கான பிறப்பு சான்றிதழும் தற்போது வெளியாகி உள்ளது. அதில் தந்தை பெயர் டி.ஜெயக்குமார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 20 ஆண்டுகளாக அ.தி.மு.கவில் முக்கிய பிரமுகராக இருப்பவர்  ஜெயக்குமார். அமைச்சர், சபாநாயகர் என அரசு பதவிகளிலும் இருந்து வருபவர். இவர் சிந்து என்ற பெண்ணுடன் பல ஆண்டுகளாக ரகசிய தொடர்பில் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது Metoo இந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில் தமிழக அமைச்சர் பற்றிய இந்த தகவல் பெரும் சர்சையை ஏற்படுத்தி உள்ளது. எனினும் இதுகுறித்து ஜெயக்குமார் தரப்பில் இருந்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages