கர்நாடகத்தை தொடர்ந்து தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல்-பொதுமக்கள் பீதி - Agnipuratchi

கர்நாடகத்தை தொடர்ந்து தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல்-பொதுமக்கள் பீதி

Share This

கேரளா, கர்நாடகத்தை தொடர்ந்து தமிழகத்திலும் தற்போது பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் பொதுமக்களிடையே அச்சம் நிலவுகிறது. கூடலூர் துணை வட்டாட்சியர், வாணியம்பாடி கூலித்தொழிலாளி என பன்றிக்காய்ச்சலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. திருச்சியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குளித்தலை ஆத்தம்பட்டியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவருக்கு எச்.1.என்.1 பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதே போல நெல்லை மாவட்டத்தில் 4 பேரும், கோவையில் 2 பேரும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஆளாகியுள்ளனர். பெங்களூருவில் நேற்று ஒரே நாளில் பன்றிக்காய்ச்சலுக்கு 5 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே தமிழகத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை தற்போது எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages