ஏர்செல்,மேக்சிஸ் வழக்கு-ப.சிதம்பரம் மற்றும் கார்த்திக் சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு - Agnipuratchi

ஏர்செல்,மேக்சிஸ் வழக்கு-ப.சிதம்பரம் மற்றும் கார்த்திக் சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு

Share This

மத்திய நிதி மந்திரியாக ப.சிதம்பரம் பதவியில் இருந்த போது ஏர்செல் நிறுவன பங்குகள் மலேசியாவில் உள்ள மேக்சிஸ் நிறுவனத்துக்கு கடந்த 2006ம் ஆண்டு விற்பனை செய்யப்பட்டது. இதில் பா.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு தொடர்பு உள்ளது என்று வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது குறித்த வழக்கு டெல்லியில் உள்ள பாட்டியாலா சிபிஐ நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி, சிதம்பரம் மற்றும் கார்த்தி இருவரும், மனு தாக்கல் செய்தனர். இந்த விவகாரத்தில் இன்னும் உத்தரவு⚖ பிறப்பிக்கப்படாத நிலையில், இருவரையும் கைது செய்ய இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இன்று மீண்டும் மனு விசாரணைக்கு வந்தபோது, ப.சிதம்பரம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அப்போது, வழக்கு விசாரணையை நவம்பர் 1ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம், அதுவரை சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடையினை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages