ஆளுநர் விமர்சினத்திற்கு ஆளானதையடுத்து ஆளுநர் மாளிகை விளக்கம் - Agnipuratchi

ஆளுநர் விமர்சினத்திற்கு ஆளானதையடுத்து ஆளுநர் மாளிகை விளக்கம்

Share This

அண்மையில் ஆளுநரை விமா்சித்ததாக கூறி ஆளுநா் மாளிகை சாா்பில் காவல்துறையில் புகாா் அளிக்கப்பட்டு புகாாின் அடிப்படையில் நக்கீரன் இதழ் ஆசிாியா் கோபால் கைது செய்யப்பட்டு மாலை விடுவிக்கப்பட்டாா். இந்த கைது நடவடிக்கை குறித்து சர்ச்சைகள் எழுந்த நிலையில், தற்போது இது குறித்து ஆளுநர் மாளிகை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த ஒரு வருட காலத்தில் பேராசிாியை நிா்மலாதேவி ஆளுநா் மாளிகைக்கு வந்ததே கிடையாது. மேலும் மதுரை காமராஜா் பல்கலைக்கழக விழாவிற்கு ஆளுநா் சென்ற போது அவரது செயலாளா் உடன் செல்லவில்லை. ஆளுநரின் செயலாளரையும் நிா்மலாதேவி சந்தித்ததில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆளுநருக்கு எதிராக விடுக்கப்படும் நேரடி மற்றும் மறைமுக அச்சுறுத்தல்களை சகித்துக்கொள்ள முடியாது என்றும் அந்த அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages