பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து போராட்டம்: திண்டிவனத்தில் மருத்துவர் அய்யா பங்கேற்கிறார்! பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி அறிவிப்பு - Agnipuratchi

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து போராட்டம்: திண்டிவனத்தில் மருத்துவர் அய்யா பங்கேற்கிறார்! பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி அறிவிப்பு

Share This

தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் வரலாறு காணாத அளவுக்கு பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்பட்டிருப்பதைக் கண்டித்து நாளை மறுநாள் (05.10.2018) வெள்ளிக்கிழமையன்று தமிழ்நாடு முழுவதும் மாவட்ட மற்றும் வட்டத் தலைநகரங்களில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படும்  என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிவித்திருக்கிறார்.

அதன்படி நாளை மறுநாள் காலை 10.00 மணிக்கு திண்டிவனத்தில் நடைபெறும் போராட்டத்தில் மருத்துவர் அய்யா அவர்கள் கலந்து கொள்கிறார்கள். அமைப்பு ரீதியிலான திண்டிவனம் மாவட்டத்தைச் சேர்ந்த பா.ம.க. துணைப் பொதுச்செயலாளர், துணைத்தலைவர், மாவட்ட செயலாளர்கள், மாவட்டத் தலைவர்கள் உள்ளிட்டோரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்பர்.

சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகில் நடைபெறும் போராட்டத்திற்கு பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தலைமையேற்கிறார். வடக்கு மண்டல இணைப் பொதுச்செயலாளரும், தொடர்வண்டித் துறை முன்னாள் இணையமைச்சருமான ஏ.கே. மூர்த்தி மற்றும் நிர்வாகிகள் இதில் கலந்து கொள்கின்றனர்.

மற்ற இடங்களில் போராட்டத்திற்கு தலைமை ஏற்கும் முக்கிய நிர்வாகிகள் விவரம் வருமாறு:

1. விழுப்புரம் - வடிவேல் இராவணன், பொதுச்செயலாளர்

2. விருதுநகர் - திலகபாமா, பொருளாளர்

3. அரக்கோணம் - அரங்க.வேலு, தொடர்வண்டித்துறை முன்னாள் இணையமைச்சர்

4.  வேலூர் -  என்.டி. சண்முகம், முன்னாள் மத்திய அமைச்சர்

5.  செஞ்சி -  மு.துரை, முன்னாள் மக்களவை உறுப்பினர்

மற்ற மாவட்டங்களில் மாவட்ட மற்றும் வட்டத் தலைநகரங்களில் நடைபெறும் போராட்டங்களில்  பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர்கள், மாநில துணைத் தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள், மாவட்டத் தலைவர்கள் மற்றும் துணை அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொள்வர். போராட்டத்திற்கான ஏற்பாடுகளை மாநில, மாவட்ட நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் அதன் துணை அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அனைவரும் இந்த போராட்டத்தில் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மக்களுக்கு எடுத்துக் கூறி அவர்களையும் போராட்டத்தில் பங்கேற்கச் செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages