தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த மே மாதம் 22ந்தேதி மக்கள் கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது கலவரம் ஏற்பட்டதை தொடர்ந்து போலீசார் நடத்திய தடியடி மற்றும் துப்பாக்கி சூட்டில் 13 பேர் இறந்தனர். 100க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இதில் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகாவுக்கு உட்பட்ட கீழமுடிமண் கிராமத்தை சேர்ந்த ஷிப்பிங் கம்பெனி டிரைவர் ஜஸ்டின் மீது போலீஸ் நடத்திய தடியடியில், படுகாயமடைந்தார். அவர் பாளையங்கோட்டை மருத்துவமனையில் கடந்த 5 மாதங்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி நேற்று மரணமடைந்துள்ளார். இதனையடுத்து துப்பாக்கி சூட்டில் பலியானதன் எண்ணிக்கை 13ல் இருந்து 14ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி துப்பாக்கிசூடு-மேலும் ஒருவர் மரணம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment