சபரிமலை கோவிலில் பெண் ஊழியர்கள் நியமனம் குறித்து சர்ச்சை -திருவாங்கூர் தேவசம் போர்டு விளக்கம் - Agnipuratchi

சபரிமலை கோவிலில் பெண் ஊழியர்கள் நியமனம் குறித்து சர்ச்சை -திருவாங்கூர் தேவசம் போர்டு விளக்கம்

Share This

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினையடுத்து, சபரிமலை விவகாரத்தில் திருவாங்கூர் தேவசம் போர்டு வெளியிட்டுள்ள அறிவிப்பு புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருவாங்கூர் தேவசம் போர்டு ஆணையர் வாசு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு தரிசனத்துக்காக கூடுதலாக பெண் ஊழியர்களை பணியமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்கள் முன்னுரிமை அடிப்படையில் பணியமர்த்தப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இதனையடுத்து இந்த நடவடிக்கைக்கு எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் இந்த அறிக்கையினை உடனே திரும்ப பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்கள். இதற்கு பதிலளித்துள்ள தேவசம் போர்டு, "ஏற்கனவே பம்பையில் மகர ஜோதியின் போது, வயது வந்த பெண்கள் கோயிலுக்கு செல்லாமல் தடுக்கும் பொருட்டு சோதனை செய்வதற்காக பெண்கள் பணியமர்த்தப்பட்டனர். எனவே தற்போது கூடுதலாக பெண் ஊழியர்கள் பணியமர்த்தப்படுகின்றனர். இதில் தவறில்லை" என்று விளக்கம் அளித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages