சிலைக்கடத்தல் வழக்கில் ரன்வீர்ஷா மற்றும் கிரண்ராவின் முன்ஜாமின் மனுவுக்கு மறுப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள பழமையான கோவில்களில் இருந்த சாமி சிலைகள் கடத்தல் தொடர்பாக ஐ.ஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் சென்னையில் தொழில் அதிபர் ரன்வீர் ஷாவுக்கு சொந்தமான வீடு மற்றும் பண்ணை வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு, ஏராளமான சிலைகள் மற்றும் தூண்கள் மீட்கப்பட்டதை தொடந்து, அவரது தோழி கிரண்ராவ் வீட்டில் இருந்து ஏராளமான சிலைகள், தூண்கள் அண்மையில் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்த விசாரணைக்காக இவர்கள் இருவரோடு, கிரண் ராவின் நிறுவன பொதுமேலாளர் தயாநிதி உட்பட ஊழியர்கள் 7 பேருக்கு சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர். போலீஸ் சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ரன்வீர்ஷா, கிரண்ராவ் ஆஜராகவில்லை. இவர்களை கைது⛓ செய்ய மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்து, விசாரணையினை வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சிலை கடத்தல் விவகாரம்-முன்ஜாமீன் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment