சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் ஆசிஃப் பிரியாணி உணவு தயாரிப்புக் கூடத்துக்கு சீல் வைத்த உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள், உரிமத்தையும் ரத்து செய்துள்ளனர். சென்னை மற்றும் புறநகரில் உள்ள சுமார் 20 ஆசிஃப் பிரியாணி கடைகளுக்கு பிரியாணி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் இந்த உணவு கூடத்தில் இருந்து தான் வினியோகிக்கப்பட்டு வந்தன. கடந்த 3 மாதங்களுக்கு முன் இங்கு சோதனை நடத்திய உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள், தரக் கட்டுப்பாட்டு விதிகளின் படி புகைபோக்கி, டைல்ஸ், உடையாத தரைத் தளம், தரையில் நீர் தேங்காத நிலை, சுகாதாரமான தண்ணீர், பூச்சிகள் அண்டாத நிலை உள்ளிட்டவற்றை உறுதி செய்ய நோட்டீஸ் அளித்தனர். ஆனால் 3 மாத அவகாசம் கொடுத்தும், எந்த நடவடிக்கையையும் அந்த நிறுவனம் எடுக்காத நிலையில், நேற்று அங்கு சென்ற 10க்கும் மேற்பட்ட உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உணவுக் கூடத்துக்கு சீல் வைத்தனர். உணவுத் தயாரிப்புக் கூடத்தின் உரிமமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கிண்டி ஆசிஃப் பிரியாணி உணவு தயாரிப்புக் கூடத்துக்கு சீல்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment