ஓபிஎஸ் என்னை சாதித்தது உண்மையே -டிடிவி தினகரன் விளக்கம் - Agnipuratchi

ஓபிஎஸ் என்னை சாதித்தது உண்மையே -டிடிவி தினகரன் விளக்கம்

Share This

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கடந்த ஆண்டு ஜூலை 12ம் தேதி டிடிவி தினகரனை சந்தித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஆட்சியில் இருந்து இறக்கிவிட்டு, இருவரும் இணைந்து ஆட்சியமைக்க ஆதரவு கோரியதாக டிடிவி தினகரனின் ஆதரவாளர் தங்க தமிழ்ச் செல்வன் அளித்த பேட்டி தமிழக அரசியலில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது. ஆனால், தினகரன் அதிமுகவுடன் இணைய தினகரன் 2 மாதத்திற்கு முன் தூதுவிட்டதாகவும், அதை ஏற்காததால் தற்போது இவ்வாறு அவர் சூழ்ச்சி செய்கிறார் என்றும் அமைச்சர்கள் தங்கமணி, முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் மறுப்பு தெரிவித்துள்ளார்கள். இது குறித்து தற்போது பேட்டியளித்துள்ள தினகரன் என்னை சந்தித்தது உண்மை. தான் செய்தது தவறு என்றும், பழனிசாமியை எதிர்க்க என்னுடன் சேர்வதாகவும் அவர் கூறினார். இதனை ஓபிஎஸ் மறுக்க மாட்டார். மேலும் கடந்த செப்டம்பர் இறுதி வாரத்தில் தன்னை சந்திக்க துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் நேரம் கேட்டார். பழனிசாமியை இறக்கிவிட்டு, எனக்கு பதவி தர விரும்பினார். அமைச்சர் தங்கமணியும், வேலுமணியும் என்னை துணை முதல்வர் ஆக்க முயன்றனர். பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வத்துடன் இணைவது தற்கொலைக்கு சமம்" என்று பேசியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages