கிருஷ்ணராஜ சாகர் அணையில் காவிரி தாய்க்கு 125 அடி உயர சிலை-கர்நாடக அரசு - Agnipuratchi

கிருஷ்ணராஜ சாகர் அணையில் காவிரி தாய்க்கு 125 அடி உயர சிலை-கர்நாடக அரசு

Share This

கர்நாடகாவில் மஜத மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாண்டியா மாவட்டத்தில் ரூ.1,200 கோடி செலவில், காவிரி தாய்க்கு சிலை வைக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. காவிரி ஆறானது, கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உருவாகி கரைபுரண்டு ஓடி தமிழ்நாட்டில் வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது. கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கிருஷ்ணராஜ சாகர் அணை அமைந்துள்ளது. அந்த அணையில் சிலை நிறுவப்படவுள்ளது என்று அறிவித்த முதல்வர் குமாரசாமி, இந்த சிலை வளாகத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளார். இந்த அருங்காட்சியகத்தில் கிருஷ்ணராஜ சாகர் அணையின் முழு தோற்றத்தை பார்வையிடும் வகையில், சுமார் 360 அடி உயர கண்ணாடி கோபுரம் கட்டமைக்கவும் முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages