வண்டலூர் உயிரியல் பூங்காவில் 3 புதியவகைக் குரங்குகள் - Agnipuratchi

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 3 புதியவகைக் குரங்குகள்

Share This

சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பல்வேறு பகுதி மக்களின் சுற்றுலா தளமாக இருப்பது வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா. இங்குள்ள குரங்கு வகைகளில், மனிதக்குரங்கு, பபூன் குரங்கு பொதுமக்களை மிகவும் கவரக்கூடியதாகும். குறிப்பாக மனிதக்குரங்குகளின் செயல்பாடுகள் மனிதர்களைப் போலவே இருப்பதால், பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துசெல்வார்கள். இந்நிலையில், தற்போது கப்புசின் குரங்கு, அணில் வால் குரங்கு மற்றும் சிவப்பு கை டாமரின் என்ற மூன்று வெளிநாட்டு குரங்குகள் பொதுமக்களின் பார்வைக்காக கொண்டு வரப்பட்டுள்ளன. முதற்கட்டமாக மூன்றுவகை குரங்குகளும் பூங்காவிலுள்ள மருத்துவமனை நோய்த்தடுப்பு பகுதியில் வைக்கப்பட்டன. இங்குள்ள தட்பவெப்ப நிலைக்கு ஏற்றவாரு அதன் உடலியல் மாற்றங்கள் ஒத்து போகும் வரையில், தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டது. மேலும், தொற்று நோய் ஏற்பட வாய்ப்பு ஏதும் உள்ளதா என்று சோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages