எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கல்லூரியில் உள்ள பெண்கள் விடுதியில் உள்ள லிப்டில் இருந்த பணியாளர், அந்த பெண்ணிடம் தன்னுடைய ஆடைகளை அவிழ்த்து தவறாக நடந்து கொள்ள முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி கத்தி கூச்சலிட்டவாறு லிப்டை நிறுத்தி வேகமாக வெளியே ஓடியுள்ளார். இது குறித்து புகார் அளித்தும் சம்மந்தப்பட்ட நபர் மீது நிர்வாகம் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இதனை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் காவல் நிலையத்திலும் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர். பணியாளரை உடனடியாக கைது⛓ செய்ய வேண்டும் என்று கூறி நேற்று இரவு முதல் மாணவிகள் போராட்டம் நடத்தினர். இதற்கிடையே புகார் அளிக்க வந்த மாணவியிடம் விடுதியின் பெண் வார்டன், உன்னுடைய ஆடை சரியில்லாத காரணத்தில் தான் அந்த பணியாளர் உன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயன்று இருக்கிறான் என்று கூறியுள்ளார். இது மாணவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
எஸ்.ஆர்.எம் கல்லூரி விடுதியில் மாணவிக்கு பாலியல் தொல்லை-மாணவர்கள் போராட்டம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment