புதுச்சேரியில் இன்று முழு அடைப்பு போராட்டம் - Agnipuratchi

புதுச்சேரியில் இன்று முழு அடைப்பு போராட்டம்

Share This

சபரிமலை போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் ஈடுபட்ட பலரை கேரள அரசு கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அதனை கண்டித்து பாஜ.க., சார்பில் இன்று புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் நடத்த படுகிறது. முழு அடைப்பு நடைப்பெறுவதை காரணம் காட்டி அரசு அதிகாரிகள் யாரும் விடுமுறை எடுக்கக் கூடாது எனவும், அவசர காரணங்கள் தவிர பிறர் விடுமுறை எடுக்கும் பட்சத்தில் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி தலைமைச் செயலாளர் அரசு ஊழியர்களை எச்சரித்துள்ளார். மேலும், இந்த போராட்டத்தினையடுத்து புதுச்சேரியில் பெரும்பாலான தனியார் பஸ்கள் இயங்கவில்லை. புதுச்சேரி மற்றும் தனியார் பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வருகின்றன. புதுச்சேரி நகர் முழுவதும் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பந்த் காரணமாக தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் அது வெறும் வதந்தியே என்று புதுச்சேரி பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages