பட்டாசு வெடித்த சிறுவன்! கம்பி எண்ணும் அப்பா! ஆரம்பித்தது அக்கப்போர்! - Agnipuratchi

பட்டாசு வெடித்த சிறுவன்! கம்பி எண்ணும் அப்பா! ஆரம்பித்தது அக்கப்போர்!

Share This

டெல்லியில் தடையை மீறி சிறுவன் பட்டாசு வெடித்ததால், அவனது தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.

காசிப்பூர் பகுதியில் சிறுவன் பட்டாசு வெடித்தது குறித்து, பக்கத்து வீட்டு நபர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து, அங்கு வந்த போலீசார் சிறுவனிடம் இருந்து பட்டாசுகளை பறிமுதல் செய்ததுடன், அவனுக்கு பட்டாசுகளை வங்கிக் கொடுத்த குற்றத்திற்காக, சிறுவனின் தந்தையை கைது செய்தனர்.

இதனிடையே, டெல்லியில் சர்தார் பஜார், சுப்சி மண்டி, புராரி ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளை ஆய்வு செய்த போலீசார், சுமார் 650 கிலோ எடையிலான பட்டாசுகளையும் பறிமுதல் செய்தனர். மேலும், டெல்லியில் மாசுக் கட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு, கட்டுமானப் பணிகள் மற்றும் இடிப்பு பணிகளுக்கும் தற்காலிகமாக, உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதை மீறியதாக, கடந்த 2 நாட்களில் சுமார் 80 லட்சம் ரூபாய் அபராதமும் வசூலிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages