திருப்பதியை அடுத்து திருமலையிலும் பிளாஸ்டிக் உபயோகத்திற்கு தடை - Agnipuratchi

திருப்பதியை அடுத்து திருமலையிலும் பிளாஸ்டிக் உபயோகத்திற்கு தடை

Share This

பிளாஸ்டிக் பயன்பாட்டினால் அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை தவிர்ப்பதற்காக புகழ்பெற்ற வழிபாட்டு தலங்கள், சுற்றுலா தலங்கள் போன்ற இடங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் திருப்பதியில் கடந்த மாதம் 2ந்தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து, தற்போது திருமலையிலும் வருகிற 10ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை திருப்பதி திருமலை தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி கே.எஸ்.சீனிவாச ராஜு தெரிவித்தார். நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்காலிடம் இருந்து இந்த தடைக்கான ஒப்புதலை பெற்று விட்டபின், இந்த உத்தரவு⚖ தீவிரமாக அமல்படுத்தப்படும் எனவும் சீனிவாச ராஜு கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages