தொலைபேசி இணைப்பு விவகாரம்-மாறன் சகோதரர்கள் மனு தள்ளுபடி - Agnipuratchi

தொலைபேசி இணைப்பு விவகாரம்-மாறன் சகோதரர்கள் மனு தள்ளுபடி

Share This

காங்கிரஸ் ஆட்சியின் போது திமுகவை சேர்ந்த திமுக.,வின் தயாநிதி மாறன், மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த போது, சென்னை போட் கிளப்பில் உள்ள வீட்டில் சட்டவிரோதமாக டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் வைத்து, அதன்மூலம் தனது சகோதரர் நிறுவனமான சன்டிவி நிறுவனத்துக்கு உபயோகப்படுத்தி வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் நீதிமன்றம் விசாரணை நடத்தி வழங்கில் சம்மந்தப்பட்ட அனைவரையும் விடுதலை செய்தது. ஆனால் இதை எதிர்த்து சிபிஐ தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனையடுத்து, குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய மாறன் சகோதரர்கள் தரப்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் மாறன் சகோதரர்கள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்⚖. தவிர, குற்றச்சாட்டுகளை புதிதாக பதிவு செய்யவும் உத்தரவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages