அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம் பேச பயிற்சி அளிப்பது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி - Agnipuratchi

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம் பேச பயிற்சி அளிப்பது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

Share This

தமிழ் வழியில் பயிலும் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் 80 லட்சம் பேர், ஆங்கிலப் பேச்சு பயிற்சி திறன் இல்லாததால், போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள முடியாமல் பாதிக்கப்படுவதாகவும், அரசு தமிழ் வழிப் பள்ளிகளில், ஆங்கிலப் பேச்சு பயிற்சி வகுப்புகளை நடத்த உத்தரவிடக் கோரியும் திமுக முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு வழக்குத் தொடர்ந்தார். இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கினை விசாரித்த நீதிபதிகள், 'போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் மாணவர்களுக்காக, அரசு பள்ளிகளில் ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்புகளை ஏன் நடத்த கூடாது⁉' என்று கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக, டிசம்பர் 6ம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages