எல்லோரிடமும் கருணை காட்டுங்கள் என்று போதித்த இறைதூதர் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை மிலாதுன் நபி திருநாளாகக் கொண்டாடும் இஸ்லாமியரர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆறு வயதில் தாயை இழந்த நபிகள் தமது இளம் வயதில் வறுமையின் கொடுமைகளை அனுபவித்தார். நாற்பது வயதில் இறைத்தூதுகளை பெறத் தொடங்கிய அவர் அடுத்த 23 ஆண்டுகளுக்கு அற்புதங்களை நிகழ்த்தினார். வறுமையிலும் அவர் செம்மையாகவும், தூய்மையாகவும், அழுக்காறு இன்றியும், உண்மை மட்டுமே உரைத்தும், எவரிடத்தும் கோபம் கொள்ளாமலும், பேராசையின்றியும், அன்பு செலுத்தியும் வாழ்ந்தார். அதனால் தான் அவரது வாழ்க்கை வரலாறாக மாறியிருக்கிறது. உலகில் உள்ள அனைவரும் பின்பற்றத்தக்க உன்னதமாக பாடமாக இறைதூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கைப் போற்றப்படுகிறது.
கோபம் அறிவை விழுங்கிவிடும்; பொறாமை மார்க்கத்தை விழுங்கிவிடும்; பேராசை வெட்கத்தை விழுங்கிவிடும்; புறம் பேசுதல் நற்செயலை விழுங்கிவிடும் என்று இறைதூதர் போதித்தார். அதை மதித்து பொறுமை, சகிப்புத் தன்மை, சமாதானம், சகோதரத்துவம் போன்றவற்றை கடைபிடித்து, உலகில் அமைதி, வளம், நல்லிணக்கம், மகிழ்ச்சி ஆகியவற்றை ஏற்படுத்த அவரது பிறந்தநாளில் நாம் உறுதியேற்போம்.
No comments:
Post a Comment