இலங்கை அதிபர் சிறிசேனா மேற்கொண்ட அனைத்து கட்சி கூட்டம் தோல்வி - Agnipuratchi

இலங்கை அதிபர் சிறிசேனா மேற்கொண்ட அனைத்து கட்சி கூட்டம் தோல்வி

Share This

ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றிபெற்றதால் ஆத்திரமடைந்த அவரது ஆதரவு எம்பிக்கள், நாடாளுமன்றத்தில் வன்முறையில் ஈடுபட்டனர். சபாநாயகர் மீது மிளகாய்ப்பொடி வீசி தாக்குதல் நடத்தினர். இதனிடையே, அரசியல் குழப்பங்களுக்கு தீர்வு காண அதிபர் சிறிசேனா நேற்று அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். அவரது இல்லத்தில் நடந்த இக்கூட்டத்தில் ராஜபக்சே, ரணில் விக்ரமசிங்கே ஆகியோர் தனது ஆதரவாளர்களுடன் பங்கேற்றனர். ஆனால், இந்த அனைத்து கட்சி கூட்டம் தோல்வியில் முடிவடைந்தது. இதனையடுத்து இன்று மீண்டும் கூடும் நாடாளுமன்ற கூட்டம் பெரும் எதிர்பார்ப்பினையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages