தந்தி டிவி கருத்துக்கணிப்பை கட்டவிழ்ப்பது எப்படி? - Agnipuratchi

தந்தி டிவி கருத்துக்கணிப்பை கட்டவிழ்ப்பது எப்படி?

Share This

தமிழக பத்திரிகைகள் எவ்வாறு Fake News-களை உருவாக்குகின்றன என்பதற்கு தந்தி டிவி வெளியிடும் கருத்துக்கணிப்புகள் எடுத்துக்காட்டுகளாக உள்ளன. நடிகர் கமல்ஹாசனின் விசில் அமைப்பை சேர்ந்த அருண் கிருஷ்ணமூர்த்தியும் தந்தி டிவியும் இந்த Fake Newsகருத்துக்கணிப்பை நடத்தியதாக கூறிக்கொள்கின்றனர்.

ஆனால், இந்த கருத்துக்கணிப்பு முழுவதுமே, வெறும் 'செட் அப் தான்'! 'ஒரே பொய்யை மீண்டும் மீண்டும் சொல்வதன் மூலம் அதனை உண்மையாக்கலாம்' என்கிற கோயபல்ஸ் ததத்துவத்தின் பின்னணியில் உருவாவதுதான் இந்த கருத்துத்திணிப்பு!

கருத்துக்கணிப்பை கட்டவிழ்ப்பது எப்படி?

மேற்படி தந்தி டிவி கருத்துகணிப்பில் அவரவர் சொந்த அரிப்பை தீர்த்துக்கொள்ளும் போக்கு இருப்பதை பின்வரும் - 1. சாதிப்பாசம்,2. சொந்தக்கட்சி விசுவாசம், 3. டெல்லி எஜமானர் உத்தரவு - ஆகிய மூன்று உண்மைகள் மூலம் அறியலாம்: 

1. சாதிப்பாசம்:

2016 தேர்தலில் 1% வாக்குகளை நாம் தமிழர் கட்சி வாங்கியது. ஆனால், அக்கட்சிக்கு தற்போது 3% ஆதரவு இருப்பதாக தந்தி டிவி கூறுகிறது. இரண்டு ஆண்டுகளில் 200% ஆதரவு உயர்ந்தது எப்படி? இதற்கு விடை காண வேண்டும் என்றால், "நாம் தமிழர்" என்கிற கட்சியை முதலில் தொடங்கியவர் தந்தி டிவி நிறுவனர் சி.ப. ஆதித்தனார் என்பதை வைத்துசாதிப்பாசத்தைபுரிந்துகொள்ளலாம்! 

 2. சொந்தக்கட்சி விசுவாசம்:

 இதுவரை ஒரு தேர்தலில் கூட நிற்காத கட்சி கமலஹாசனின் கட்சி ஆகும். ஆனால், அந்தக் கட்சிக்கு தமிழ்நாட்டில்5% ஆதரவு இருப்பதாக தந்தி டிவி கூறுகிறது. இந்த கருத்துக்கணிப்பை நடத்தியதாகக் கூறிக்கொள்ளும் அருண் கிருஷ்ணமூர்த்தி தான் இதற்கு காரணம்.

 2017 ஆம் ஆண்டு கமல்ஹாசன் தொடங்கிய 'மையம் விசில்' எனும் அமைப்பை நடத்துபவர்தான் இந்த அருண் கிருஷ்ணமூர்த்தி. ஒரு கட்சியின் பிரமுகராக உள்ளவரே, மற்ற கட்சிகளை குறித்து கருத்துக்கணிப்பு நடத்தும் விநோதம் தமிழ்நாட்டில் தான் நடக்கும். அந்த வகையில் தனது சொந்தக் கட்சியை பெரிதாகக் காட்ட கமல்ஹாசனுக்கு 5%அளித்துள்ளார் அருண் கிருஷ்ணமூர்த்தி. 

 3. டெல்லி எஜமானர் உத்தரவு

 இதுவரை ஒரு தேர்தலில் கூட நிற்காத, இன்னும் பெயர் கூட வைக்காத ரஜினிகாந்த் கட்சிக்கு 6% ஆதரவு இருப்பதாக தந்தி டிவி கூறுகிறது. இதற்கு பின்னால் இருப்பது டெல்லி எஜமானர்கள் உத்தரவு ஆகும்.

 30.7.2018 அன்று டெல்லியில் பிரதமர் மோடியினை தமிழக ஊடக முதலாளிகள், முதன்மை ஆசிரியர்கள் என 22 பேர் சந்தித்தனர். அவர்களில் தந்தி டிவி பிரமுகர்களும் முக்கியமாக இடம்பெற்றிருந்தனர். அந்த ரகசிய சந்திப்பில் பாஜகவுக்கு ஆதரவான செய்திகளை பரப்புவது எப்படி, அதனை மக்கள் நம்புமாறு செய்வது எப்படி - என பேசி முடிவெடுக்கப்பட்டது. (அதனால்தான் அந்த ரகசிய சந்திப்பு எந்த ஊடகத்திலும் வெளியாகவில்லை).

 பாஜக தமிழ்நாட்டில் நேரடியாக வளர்வது உடனடி சாத்தியம் இல்லை என்பதால், ரஜினியை பெரிய அரசியல் சக்தியாக காட்ட வேண்டும் என்று அப்போது பேசி முடிவெடுத்திருக்கிறார்கள்.

 ஆகவே, டில்லி எஜமானர்கள் உத்தரவுக்கு ஏற்ப, கட்சியே ஆரம்பிக்காத ரஜினிக்கு 6% ஆதரவு என்று கூறியுள்ளனர். 

அப்பட்டமான ஊடக விபச்சாரம் (Presstitute)

இப்படியாக தந்தி டிவி கருத்துக்கணிப்பின் மூலம் சொந்த சாதிக்கு 3%, சொந்த கட்சிக்கு 5%,டெல்லி எஜமானர் உத்தரவு படி 6%என மக்களின் கருத்துகளை இவர்களாகவே வாரி வழங்கி, தாங்கள் ஊடக விபச்சாரிகள் (Presstitutes)என்பதை மெய்ப்பித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages